வைத்தியர்கள் நாளை பணிப்பகிஷ்கரிப்பில்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை (08) காலை 8.00 மணி முதல் 24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது.

எதிர்வரும் 9 ஆம் திகதி காலை 8.00 மணி வரையில் இவ்வாறு பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அந்த சங்கத்தின் ஊடகச் செயலாளர் கலாநிதி சமில் வீரசிங்க தெரிவித்தார்.

அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கை மற்றும் நாட்டில் நிலவும் மருந்துப் பற்றாக்குறைக்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தப் பணிப்புறக்கணிப்பு அமுல்படுத்தப்படுவதாக வைத்தியர் சம்மில் வீரசிங்க தெரிவித்துள்ளார்

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply