பாடசாலையொன்றின் மதில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் சிறுமி உயிரிழந்ததையடுத்து கோபமடைந்த குழுவொன்று பாடசாலை அதிபரை தாக்கியுள்ளனர்.
வெல்லம்பிட்டி, வேரகொடை ஆரம்ப பாடசாலையின் மதில் சுவர் இடிந்து விழுந்ததில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 5 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
விபத்தினால் ஏற்பட்ட பீதியால் மாணவர்கள் வெளியே செல்லாதவாறு பாடசாலையின் வாயிலை மூடுமாறு அதிபர் உத்தரவிட்டதையடுத்து, ஆத்திரமடைந்த பெற்றோர்கள் சிலர் பாடசாலைக்குள் நுழைந்து அதிபரை தாக்கியுள்ளனர்.
தாக்குதலால் கண் பாதிக்கப்பட்ட அதிபர் தற்போது கண் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று அதிபரின் பிறந்தநாள் என்றும், அதற்காக அவர் மாணவர்களுக்கு டெஃபி மற்றும் லொலிபொப்களை விநியோகித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இன்று காலை 10.30 மணியளவில் பாடசாலையில் தண்ணீர் குழாய்கள் பொருத்தப்பட்டிருந்த கொங்கிரீட் சுவர் இடிந்து விழுந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பின்னர் கிராண்ட்பாஸ் மற்றும் தெமட்டகொடை பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மேலதிகமாக பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளும் பாடசாலைக்கு வரவழைக்கப்பட்டு பாடசாலையின் நிலைமையை சுமூகத்திற்கு கொண்டு வந்தனர்.
Follow on social media