உணவை சூடுபடுத்தி உண்பதால் ஏற்படும் ஆபத்து

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

பழைய உணவை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடும் விடயத்தில் மிகவும் கவனம் தேவை.சில உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவது, புற்று நோய் போன்ற கடுமையான நோய்கள் ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிகின்றனர்.

சில உணவுகள் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டு பின்னர் சூடாக்கி சாப்பிடுவதால் ஊட்டச்சத்து, சுவை ஆகியவற்றை இழப்பதோடு புற்று நோய் உட்பட பல நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக அவர்கள் எச்சரிக்கின்றனர்.

சூடாக்கி உண்ண கூடாத உணவுகள்

கீரையை மீண்டும் சூடாக்கி சாப்பிடுவதன் மூலம் புற்றுநோய் ஏற்படக் கூடும் என்று மருத்துவர் ஒருவர் கூறுகிறார்.

மீண்டும் சூடாக்கப்பட்ட பிறகு அதில் உள்ள நைட்ரேட்டுகள் வேறு ஒரு பொருளாக மாறுகிறது. இது புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறது.

பழைய சாதத்தை தண்ணீர் ஊற்றி வைத்து அடுத்த நாள் சாப்பிடுவது என்பது உடல் பெரும் நன்மைகளை தரும்.

ஆனால், பழைய சாதத்தை குளிர் சாதனா பெட்டியில் வைத்து மீண்டும் சூடாக்குவதன் மூலம், உணவு விஷமாகும்.அதனால் புட் பாய்சன் ஏற்பட வாய்ப்புள்ளது.

முட்டைகள் உடலுக்கு மிகவும் நல்லது இதில் அதிக அளவு புரோட்டீன் காணப்படுகிறது. ஆனால், இதை சமைத்த உடன் உட்கொள்ள வேண்டும். உணவு நிபுணர் இது குறித்து கூறுகையில்

“பொரித்த அல்லது வேகவைத்த முட்டையை மீண்டும் சூடாக்கி சாப்பிடுவது ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும் என்றும், இதன் காரணமாக வயிற்று வலி உண்டாகலாம்” எனவும் கூறுகிறார்.

பொதுவாக அதிகம் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்று உருளைக்கிழங்கு. இது சுவையானதாக இருப்பதோடு, தயாரிக்க எளிது என்பதால் பெரும்பாலானோரின் தேர்வாக உள்ளது.

அதை குளிர் சாதனா பெட்டியில் வைத்து மீண்டும் சூடாக்கும் போது அதில் அரிய வகை நுண்ணுயிரிகளின் வளர்ச்சி ஏற்படுகிறது.

முட்டையைப் போலவே, சிக்கனிலும் புரதம் நிறைந்துள்ளது. மேலும் சிக்கனை மீண்டும் சுட வைத்து சாப்பிடுவதால் செரிமான பிரச்சனையும் ஏற்படும்.

எனவே அதை சூடாக்கிய பிறகு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

Follow on social media
CALL NOW

Leave a Reply