இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 6,000-ஐ கடந்துள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் புதிதாக 769 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது பரவிவரும் கொரோனா தொற்று வகைகள் தீவிரமில்லாதவை; பெரும்பாலான நோயாளிகள் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என இந்திய மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முதியோர்கள் , கா்ப்பிணிகள், இதயநோய் பாதிப்புள்ளவர்கள், தீவிர நோயாளிகள் உள்ளிட்டோர் பொது இடங்களில் முகக் கவசம் அணிய வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சரகம் இன்று வெளியிட்ட தரவுகளின்படி,
இந்தியாவில் கடந்த மே 22 ஆம் திகதி கொரோனா தொற்று பாதிப்பு 274 ஆக இருந்தது.
தற்போது 6,133-ஆக உயா்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவா்களில் கடந்த 24 மணி நேரத்தில் 6 போ் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Follow on social media