யாழ்.சுன்னாகம் பகுதியில் சினிமா பாணியில் வாள்வெட்டு தாக்குதல் (காணொளி)

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

யாழ்.சுன்னாகம் பகுதியில் இரு வாள்வெட்டு கும்பல்கள் சினிமா பாணியில் விபத்தை ஏற்படுத்தி வாள்வெட்டு தாக்குதல் நடத்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தை தொடர்ந்து விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை வீதியில் சுன்னாக பகுதியில் காரில் பயணித்த விக்டர்எனப்படும் நபருக்கு பட்டாரக வாகனத்தில் வந்த ஜெகன் குழுவினர் மோதி விபத்துக்குள்ளாக்கி வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் செயற்படும் இரண்டு வாள்வெட்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக இன்றைய தினம் பட்டப் பகலில் அனைவரும் பார்த்திருக்க தக்க வகையில் திரைப்பட பாணியில் பட்டாரக வாகனத்தினால்

காரொன்றில் பயணித்தவரை மோதி விபத்துக்குள்ளாக்கி வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது குறித்த வாள்வெட்டு தாக்குதலில் நால்வர் காயமடைந்து யாழ்.போதன வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.

சம்பவ இடத்தில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் களம் இறக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுகிறது.

Follow on social media
CALL NOW

Leave a Reply