புதிய ஆண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் ஆண்டாக அமைய வேண்டும்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை

பிறந்துள்ள 2022 ஆம் ஆண்டு நம் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சி தரும் ஆண்டாக அமைய வேண்டும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.

-அவர் விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கையில்,,,

புத்தாண்டு பிறந்துள்ளது. 2022 ஆம் ஆண்டு நம் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சி தரும் ஆண்டாக அமைய வேண்டும்.

நாங்கள் 2021 ஆம் ஆண்டை கடந்து இன்னும் ஒரு ஆண்டில் கால் பதித்துள்ளோம்.

இந்த புத்தாண்டில் உங்களுக்கு இறை ஆசீர் நிறைய கிடைக்கப் பெற்று நீங்கள் இந்த முழு வருடத்திலும் மகிழ்ச்சியுடனும், மற்றவர்களுடன் நல்ல உறவுடனும், அன்புடனும் வாழ உங்கள் அனைவருக்கும் இனிய புதுவருட நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.என அவர் மேலும் தெரிவித்தார்.

Follow on social media
CALL NOW

Leave a Reply