எதிர்வரும் ஜூன் மாதம் 18ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை நாட்டின் பல பிரதேச செயலகங்களில் உள்ள மதுபானசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தேசிய பொசன் பண்டிகையை முன்னிட்டு குறித்த நாட்களில் மதுபானசாலைகள் மூடப்படும் என இலங்கை கலால் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மத்திய நுவரகம், கிழக்கு நுவரகம் மற்றும் மிஹிந்தலை ஆகிய மூன்று பிரதேச செயலக பிரிவுகளில் குறித்த காலப்பகுதியில் அனைத்து மதுபானசாலைகளும் அக்காலப்பகுதியில் மூடப்படும்.
Follow on social media