தமிழறிஞர் அவ்வை நடராஜன் காலமானார்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

மூத்த தமிழ் அறிஞரும், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான அவ்வை நடராஜன் (85) வயது மூப்பின் காரணமாக சென்னையில் நேற்று காலமானார்.

அவ்வை நடராஜன் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவ்வை நடராஜன் 1936 ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு எனும் ஊரில் பிறந்தார்.

மதுரை தியாகராஜர் கல்லூரியில் இவர் தமிழில் முதுகலை பட்டம் பெற்றார்.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ‘சங்க இலக்கியத்தில் பெயரிடு மரபு’ என்ற ஆய்வை மேற்கொண்டு, 1958ஆம் ஆண்டில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றார்.

அதன் பின்னர் ‘சங்க காலப் புலமைச் செவ்வியர்’ என்னும் பொருளில் ஆய்வு செய்து கலாநிதி பட்டம் பெற்றார்.

தமிழறிஞர் அவ்வை நடராஜன் 1992 முதல் 1995 வரை தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பொறுப்பு வகித்தார்.

அதன் பிறகு, 2014 ஆம் ஆண்டில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் துணைத்தலைவராக இருந்தார்.

2011ம் ஆண்டு இவருக்கு இந்தியாவின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை அந்நாட்டின் மத்திய அரசு வழங்கி கௌரவித்தது.

Follow on social media
CALL NOW

Leave a Reply