முல்லைத்தீவு மாவட்டத்தின் விசேடமான நிகழ்வுகளில் ஒன்றுதான் வற்றாப்பளை அம்மன் பொங்கல். இப் பொங்கலானது கடந்த 09.06.2025 அன்று மிக விமர்சையாக நடைபெற்றது. இங்கு பல்வேறு ஊர்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழமை அதே போல இந்த வருடமும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
பொங்கலின் பின்னரான ஆலயச் சூழல் பொலித்தீன்களாலும் குப்பைகளாலும் நிறைந்து காணப்படுவது வழமை. இதை தூய்மைப்படுத்தும் நடவடிக்கையில் கடந்த 7 வருடங்களாக அவலோன் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
வழமை போல இந்த வருடமும் அவலோன் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளரின் பணிப்பின் பேரில் அவலோன் நிறுவன ஊழியர்களும் நிறைவேற்று பணிப்பாளரும் கடந்த 3 நாட்களாக தூய்மைப்படுத்தல் பணியில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலும் வற்றாப்பளை அம்மனின் பிரதான கோபுரமும் பல வருடங்களின் பின்னர் அவலோன் நிறுவனத்தினரால் சுத்திகரிப்பு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
அவலோன் நிறுவனமானது முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு விதமான சமூக சேவைப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிட வேண்டிய விடயமாகும்

