பாடசாலை விளையாட்டுப் போட்டி நிகழ்வில் தாக்குதல் – கண்டித்து போராட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

கிளிநொச்சி சாந்தபுரம் கலைமகள் வித்தியாலய விளையாட்டு போட்டியில் புகுந்து நபர்களின் தாக்குதல் காரணமாக ஐவர் காயமடைந்துள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதல் சம்பவத்தை கண்டித்து போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டம் இன்று காலை 8 மணியளவில் சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயம் முன்பாக இடம்பெற்றது.

கிராம மட்ட அமைப்புக்கள், பெற்றோர் இணைந்து ஏற்பாடு செய்த குறித்த போராட்டத்தில், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது, பாடசாலை முதல்வர் பெருமாள் கணேசன் உள்ளிட்டோர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தனர்.

Follow on social media
CALL NOW

Leave a Reply