சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இராணுவ சிப்பாய்க்கு கடூழிய சிறை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

பதின்ம வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றத்தில் இராணுவச் சிப்பாய்க்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.

2013ஆம் ஆண்டு மே 14ஆம் திகதி நெடுங்கேணியில் 16 வயதுக்குட்பட்ட சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்படுத்தப்பட்டார் என்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் முறைப்பாட்டின் அடிப்படையில் அந்தப் பகுதி இராணுவ முகாமில் பணியாற்றிய இராமச்சந்திர ஆரியரட்ண என்ற இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டார். அவர் கடமையிலிருந்த போது சம்பவம் இடம்பெற்றது என்று ஆரம்ப விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று நேற்று தீர்ப்புக்காக தவணையிடப்பட்டிருந்தது.

மேலும், இதில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 இலட்சம் ரூபாய் இழப்பீட்டை எதிரி வழங்கவேண்டும் என்பதுடன், 5 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்தவேண்டும். செலுத்தத் தவறின் ஒரு வருட சாதாரண சிறைத்தண்டனையை அனுபவிக்கவேண்டும்” என்றும் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தண்டனைத் தீர்ப்பளித்தார்.

Follow on social media
CALL NOW

Leave a Reply