ஆயுர்வேத மருத்துவமாக பயன்படுத்தப்படும் கற்றாழை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

கற்றாழை பாரம்பரியமாக பல ஆயுர்வேத மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

கற்றாழை ஜெல் என்று அழைக்கப்படும் கற்றாழையின் சாறு மிகவும் நன்மை பயக்கும் அழகு பிரச்சனைகளுக்கும் ஆரோக்கிய சிக்கல்களையும் தீர்ப்பதில் மிகவும் நன்மை பயக்கும் கற்றாழையை உடல் எடை குறைப்புக்கும் பயன்படுத்தலாம்.

வெறும் வயிற்றில் கற்றாழை சாறு குடிப்பது உடல் எடையை குறைக்கவும் உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை மேம்படுத்தவும் உதவும்.

மேலும் தைராய்டு பிரச்சனை மற்றும் குடல் இயக்கங்களை எளிதாக்கவும் ஒரு சிறந்த வழியாகும்.கற்றாழை சாறு பல ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவும்.

காணப்படும் சத்துக்கள்

கற்றாழையில் வைட்டமின்கள், தாதுக்கள், என்சைம்கள், சபோனின்கள் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. இது வைட்டமின்கள் ஏ, சி, ஈ, ஃபோலிக் அமிலம், கோலின் ஆகியவற்றின் களஞ்சியமாகும்.

இது செரிமானம், தோல் மற்றும் பற்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இவற்றுடன், கால்சியம், குரோமியம், செலினியம், மெக்னீசியம், மாங்கனீசு, பொட்டாசியம், சோடியம் மற்றும் துத்தநாகம் என பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

கற்றாழை சாற்றில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. தொடக்கத்தில் கற்றாழை சாற்றை மட்டும் குடித்துவிட்டு, பின்னர் அதை வெல்லம், நெல்லிக்காய் அல்லது பாகற்காய் போன்றவற்றுடன் கலந்து குடித்தால் உடல் எடை குறையும்.

கற்றாழை சாற்றை தினமும் குடிப்பதால், செரிமானமின்மை, மலச்சிக்கல், அமிலத்தன்மை மற்றும் வாயு போன்ற பல செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். பசியை அதிகரிக்கவும், எடை அதிகரிப்பைக் கட்டுப்படுத்தவும் இது நன்மை பயக்கும்.

கற்றாழை சாறு குடிப்பதால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும். இதை அதிகாலையில் குடிப்பதால், செரிமான பிரச்சனைகளை குணப்படுத்துவது, குடல் அமைப்பை சுத்தம் செய்வது வரை பல வழிகளில் உதவும்.

ஆயுர்வேத மருந்து தயாரிக்க கற்றாழை சாறு நீண்ட காலமாக பயன்படுத்தப்படுகிறது. இது செரிமானம் மற்றும் கல்லீரல் தொடர்பான பிரச்சனைகள், இரத்த சோகை, மஞ்சள் காமாலை மற்றும் பித்த நாளம், பித்தப்பை தொடர்பான நோய்களை குணப்படுத்த பயன்படுகிறது.

Follow on social media
CALL NOW

Leave a Reply