முன்னணி நடிகர் அமிதாப் பச்சன் வைத்தியசாலையில்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

பொலிவூட் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர்அமிதாப் பச்சன்.

80 வயதான இவர் தற்போது ‘புராஜெக்ட் கே‘ என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்து வருகிறார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்றுவந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் அங்கு அமிதாப் பச்சனின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

இதன்போது எதிர்பாரா விதமாக ஏற்பட்ட விபத்தில் சிக்கி அவரது விலா எலும்பு உடைந்ததாகவும், இதனையடுத்து அவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்தியானது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply