யாழில் கடற்படை முகாமிற்கு காணி சுவீகரிப்பு – பாரிய எதிர்ப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

காரைநகர் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட காரைநகர் – நீலங்காடு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான 40 ஏக்கர் காணியை இலங்கை எழாறா கடற்படை முகாமிற்கு அளவிடுவதற்கு மக்கள் பாரிய எதிர்ப்பை வெளியிட்டனர்.

குறித்த காணியை அளவிடுவதற்கு நில அளவைத் திணைக்களத்தினர் இன்றையதினம் வருகை தந்தபோது அப்பகுதியில் கூடிய பொதுமக்கள் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஒன்று கூடி தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

அதனையடுத்து அங்கு வந்த நில அளவைத் திணைக்களத்தினர், மக்களுக்கு சொந்தமான காணியை கடற்படையினருக்கு அளவிடுவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று எழுதி ஒப்பமிடப்பட்ட எழுத்து மூலமான ஆவணத்தை பெற்றுக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தனர்.

இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் காணியின் உரிமையாளர்கள், சமூகமட்ட அமைப்பினர், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

RP2mvl.jpg RP2LLS.jpg RP2nlA.jpg RP2pzM.jpg RP27ed.jpg Follow on social media
CALL NOW

Leave a Reply