யாழ் மிருசுவில் பகுதியில் கோர விபத்து – கிளிநொச்சி இளைஞன் பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

வீதி விபத்தில் கிளிநொச்சி இளைஞன் பலியாகியுள்ளார். குறித்த விபத்து நள்ளிரவு 2 மணியளவில் மிருசுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து உறவினர்களை ஏற்றி கண்டி நோக்கி சென்று மீண்டும் 26.03.2023 நேற்றைய தினம் மீண்டும் கண்டியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு திரும்பி உறவினர்களை இறக்கிவிட்டு மீண்டும் தர்மபுரம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேளை விபத்தில் சிக்கியுள்ளார்.

யாழ்ப்பாணம் மிருசுவில் ஆசைப்பிளை ஏற்றம் பகுதியில் மரத்துடன் மோதுண்டு படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் குமாரசாமி கஜிபரன் எனும் 27 வயதுடைய இளைஞனாவார். விஸ்வமடு மேற்கு பகுதியைச் சேர்ந்த இவர் சிறந்த சமூக சேவகருமாவார். இந்த நிலையில் பலரும் தமது அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.

உயிரிழந்தவரின் சடலத்தை விசாரணைகளின் பின்னர் உறவினர்களிலும் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி போலீஸ் சார் தெரிவித்துளனர்.

Follow on social media
CALL NOW

Leave a Reply