யாழ் வடமராட்சியில் விபத்து – 24 வயது இளைஞர் பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

வடமராட்சி யாழ் பீச் ஹோட்டலுக்கு அருகாமையில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சையிக்கிளுடனான விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தமை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் நெல்லியடி திருமகள் சோதி பஸ் தரிப்பிட ஒழுங்கையைச் சேர்ந்த கோபாலகிருஸ்ணன் கவிதாண்சன் (வயது 24) என்பவரே உயிரிழந்துள்ளதுள்ளார்.

இன்று பிற்பகல் யாழ் பீச் ஹோட்டலுக்கு அருகாமையில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சையிக்கிளுடனான விபத்தில் மோட்டார் சையிக்கிளில் பயணித்த இளைஞர் கை மற்றும் கழுத்துப் பகுதியில் விபத்திற்குள்ளான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட வேளை உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

Follow on social media
CALL NOW

Leave a Reply