யாழில் ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய மாணவன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

யாழ்.ஒஸ்மானிய கல்லுாரியின் பயிற்சி ஆசிரியர் மீது பாடசாலை மாணவன் ஒருவன் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக தொிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை(24) இடம்பெற்றுள்ளது.

அதேவேளை யாழ்.ஒஸ்மானியா கல்லூரியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதமும் இதே மாணவனால் பிரச்சினை ஏற்பட்டு ஆசிரியரொருவர் மீது குறித்த மாணவனின் தந்தை தாக்குதல் மேற்கொண்டாரென தெரிவிக்கப்படுகிறது.

முன்னர் நடந்த சம்பவம் தொடர்பாக காத்திரமான நடவடிக்கை எடுக்கப்படாமை காரணமாக தொடர்ச்சியான ஆசிரியர் மீதான தாக்குதல்கள் மேற்கொள்லப்படுவதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

Follow on social media
CALL NOW

Leave a Reply