யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் குழந்தையொன்று சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்துள்ளது.
பிறந்து 45 நாளான குழந்தையே இவ்வாறு உயிரிழந்தது.
குழந்தைக்கு தாய் பால் ஊட்டியநிலையில் சில மணி நேரங்களுக்கு பின்னர் குழந்தை மயக்கமுற்றுள்ளது.
இதனையடுத்து குழந்தையை அளவெட்டி பிரதேச வைத்தியசாலையில் சேர்த்து, மேலதிக சிகிச்சைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போது குழந்தை உயிரிழந்துள்ளதாக வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டது.
குழந்தையின் சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்ட நிலையில், மரண விசாரணையை வலிகாமம் கிழக்கு பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
குழந்தையின் உடலில் காயங்கள் மற்றும் தளும்புகள் காணப்படுவதன் காரணமாக இன்று நடைபெறும் உடல் கூற்று பரிசோதனையின் பின்னரே இறப்புக்கான காரணம் தெரியவரும் என கூறப்பட்டுள்ளது.
உடல் கூற்று பரிசோதனைக்காக குழந்தையின் சடலம் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow on social media