யாழ்ப்பாணத்தில் மின்சாரம் தாக்கி 24 வயது இளைஞர் உயிரிழப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

சோமசுந்தரம் வீதி, ஆனைக்கோட்டை பகுதியில் நேற்றைய தினம் காலை மின்சாரம் தாக்கியதில் உதயகுமார் உசாந்தன் (வயது 24) என்ற இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் காரம் சுண்டல் விற்பனை செய்யும் வண்டில் ஒன்றினை தயாரித்து, அதற்கு மின்சார வேலைகள் செய்துவிட்டு, மின்சாரம் செலுத்தினார். இதன்போது மின்சாரம் அவர்மீது பாய்ந்தது.

இந்நிலையில் அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Follow on social media
CALL NOW

Leave a Reply