யாழ் நெடுத்தீவில் தினமும் 07 மணி நேர மின் வெட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பிரதேசத்தில் தினமும் 07 மணி நேர மின் வெட்டு அமுல் படுத்தப்படுவதனால் தாம் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக நெடுந்தீவு மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

நெடுந்தீவு பிரதேசத்திற்கு இலங்கை மின்சார சபையினால் நான்கு மின் பிறப்பாக்கிகள் மூலமே மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் இரண்டு மின் பிறப்பாக்கிகள் பழுதடைந்துள்ளன.

இதன் காரணமாக தினமும் 07 மணி நேரத்திற்கு மேல் மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் நாம் பலத்த சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றோம்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பில் கவனம் செலுத்தி பழுதடைந்த மின் பிறப்பாக்கிகளை உடனடியாக திருத்த வேலைகளை மேற்கொண்டு , சீரான மின் விநியோகத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெடுந்தீவு மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting