48,500 ஆண்டுகள் பழமையான வைரஸ் கண்டுபிடிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

ஐரோப்பாவை சேர்ந்த ஆய்வாளர்கள் சிலர் செர்பியாவில் உள்ள பனிப் பாறைகளுக்கு கீழே இருந்த சுமார் 48,500 ஆண்டுகள் பழமையான ஜாம்பி (Zombie virus) வைரஸை கண்டுபிடித்துள்ளனர்.

ஏரியின் கீழ் உறைந்து கிடந்த சுமார் 12 வைரஸ்களை கண்டறிந்துள்ளனர்.

காலநிலை மாற்றம் காரணமாக இந்த பல ஆயிரம் ஆண்டுகளாக உறைந்திருந்த இந்த ஏரி உருகியுள்ள நிலையில், இதில் இந்த புதிய வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன.

ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் உள்ள இரு இடத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளை ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.

ரஷ்யா, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இப்போது கண்டறியப்பட்டுள்ள ஜாம்பி வைரஸ்களை ஆய்வு செய்துள்ளனர்.

இவை பெரும்பாலும் அமீபா நுண்ணுயிரிகளைப் பாதிக்கும் திறன் கொண்டவையாகவே உள்ளன. இவை மனிதர்களைத் தாக்கும் ஆபத்து குறைவு என்றே ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

புவி வெப்பமயமாதல் போன்ற காரணிகளால் தொடர்ந்து பனிப்பாறைகள் உருகும் நிலையிலும் ஆர்க்டிக் பகுதியில் அதிக மக்கள் குடியேறுவதும் ஆபத்த்துக்கு வாய்ப்புகள் அதிகம் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

Follow on social media
CALL NOW

Leave a Reply