இந்தியாவின் பீகாரில் ‘ஜிதியா’ பண்டிகையின் போது புனித நீராடிய 37 குழந்தைகள் உட்பட 46 பேர் உயிரிழந்தனர்.
அத்துடன் 3 பேர் காணாமல் போயுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களிற்கு இந்திய மதிப்பில் ரூ.4 இலட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளதாக பீகார் மாநில அரசு அறிவித்துள்ளது.
‘ஜிதியா’ பண்டிகை என்பது பாரம்பரிய முறைப்படி கொண்டாடப்படுகிறது.
தங்கள் குழந்தைகள் உடல், நல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்பதற்காக தாய்மார்கள் விரதம் இருந்து கொண்டாடும் பண்டிகையாகும்.
Follow on social media