பிறந்து 31 நாட்களேயான பெண் சிசு திடீர் சுகயீனத்தால் உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.
கோப்பாய் – கோண்டாவில் வீதியை சேர்ந்த க.பிரகவி என்ற பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
நேற்று மாலை திடீரென சோர்வாக காணப்பட்ட குழந்தையை பெற்றோர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர்.
எனினும் ஒரு மணி நேரத்தில் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. இந்நிலையில் திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார்
மரண விசாரணைகளை மேற்கொண்டதுடன், உடற்கூற்று பரிசோதனைக்கும் உத்தரவிட்டிருந்தார்.
உடற்கூற்று பரிசோதனையின் பின்பே இறப்பிற்கான காரணம் தொியவரும் என கூறப்படுகின்றது.
Follow on social media