துப்பாக்கி சூடு – 3 வயது குழந்தை உள்ளிட்ட மூவர் காயம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

யக்கலமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒரு குழந்தை உள்ளிட்ட மூவர் காயமடைந்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 வயது குழந்தை ஒன்றும் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே குறித்த துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

யக்கலமுல்ல, களுவலகல பகுதியில் இன்று (19) முற்பகல் 11.30 மணி அளவில் குறித்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply