பங்களாதேஷில் கண்டெனர் கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பங்களாதேஷின் சிட்டாகோங் நகரத்தில் உள்ள சித்தகுண்டா உபசில்லா பகுதியில் அமைத்துள்ள தனியார் கண்டெனர் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பலியானதோடு 450 பேர் காயமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.
இரவு திடீரென ஒவ்வொரு கண்டெனரிலும் தீ பரவியதால் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும், மேலும் பலி எண்ணிக்கை உயர வாய்ப்பு இருப்பதாகவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த அனைவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்திற்கான காரணத்தை அறிய விசாரணை துவங்கியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Follow on social media