மதுபானசாலையில் துப்பாக்கி சூடு – 15 பேர் பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

தென் ஆபிரிக்காவின் சோவெற்றோவில் உள்ள மதுபானசாலையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் குறைந்தது 15 பேர் பலியாகினர்.

இது தவிர, இந்த சம்பவத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

அவர்களின் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இன்று காலை குறிப்பிட்ட மதுபான சாலைக்குள் நுழைந்த துப்பாக்கிதாரிகள் சரமாரியாக துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதன் பின்னர் வாகனம் ஒன்றில் தப்பி சென்றுள்ளனர்.

துப்பாக்கிப் பிரயோகத்திற்கான காரணம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.

துப்பாக்கி பிரயோக சம்பவங்கள் தென் ஆபிரிக்காவில் அதிக அளவில் இடம்பெறுகின்ற போதிலும், இந்த சம்பவத்தில் பலர் பாதிப்படைந்துள்ளதாக பிராந்திய காவல்துறை தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிதாரிகள் குறித்த அடையாளம் எதுவும் தெரியாத நிலையில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Follow on social media
CALL NOW

Leave a Reply