வல்லிபுர ஆழ்வார் ஆலய நரகாசுர சங்காரம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

யாழ்ப்பாணம் வடமராட்சி வலளிபுர ஆழ்வார் ஆலய தீபவளி சிறப்பு பூசைகள் ஆலய பிரதம குரு கணபதீஸ்வரக் குருக்கள் சுதர்சனக்குருக்கள் தலமையிலான சிவாச்சாரியார்கள் தலமையில் இன்று காலை 6:45. மணியளவில் உற்சவகால பூசைகளுடன் ஆரம்பமான பூசைகளில் 8:30 மணிக்கு அபிசேகமும், முதலாம் கால பூசை 9:30 மணிக்கும், நண்பகல் 12:00 மணிக்கு உச்சிக்கால பூசையும் இடம் பெற்று பிற்பகல் 3:45 மணியளவில் அவல் பூசையும், 4:15 மணிக்கு இரண்டாம் கால பூசையும், இடம் பெற்றது.

அதனை தொடர்ந்து சரியாக 5:00 மணியளவில் வசந்த மண்டப பூசைகள் இடம் பெற்று அதனை தொடர்ந்து வசந்த மண்டபத்திலிருந்து பிள்ளையார், தனலக்ஸ்மி முன்னேவர சுதர்சன சக்கரத்து ஆழ்வார் ஆலய உள்வீதி உலாவந்து வெளி வீதியில் நரகாசுர சங்காரம் இடம் பெற்றது. இதில் வடமராட்சியின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அடியவர்கள் வருகைதந்தனர்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting