யாழில் தீப்பந்த போராட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

ஜனநாயகத்திற்காக ஒன்றிணைந்த இளையோர்களின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் (17) யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் தீப்பந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ் பண்ணைக் கடற்கரையில் இரவு 7 மணியளவில் அமைதியாக ஆரம்பித்த தீப்பந்த போராட்டம் பண்ணைப் பாலத்தில் இருந்து பண்ணை சுற்றுவட்டம் வரை பேரணியாக சென்றது.

குறித்த போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம் ஏ சுமந்திரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் எங்கே எங்கே உறவுகள் எங்கே, சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொள், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கு, கோட்டா அரசே வீட்டுக்குப் போ போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டது.

குறித்த போராட்டமானது காலி முகத்திடலில் “கோத்தபாய வீட்டுக்கு போ” என கோசமெழுப்பியவாறு முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்திற்கு ஆதரவாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply