முல்லைத்தீவில் மரமொன்றில் இருந்து நீர் சீறி பாயும் ஆச்சரியம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

புராதன வரலாற்றுக் கிராமமான குமுழமுனையில் உள்ள வயல் வெளியில் உள்ள மரமொன்றில் மக்கள் ஆச்சரியப்படும் வகையில் நீர் சீறி பாய்ந்து வருவதனால் மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

இந்த நிகழ்வு இன்று ஞாயிற்றுகிழமை (24-04-2022) காலை தொடக்கம் இடம்பெற்று வருகின்றது.

குமுழமுனை பண்டாரிக்குளம் வயல்வெளியில் மதுர மரங்கள் சூழ்ந்து நிற்கும் நடுப்பகுதியில் நறுவுளி மரம் ஒன்று நிற்கின்றது.

அம் மரத்தின் ஒவ்வொரு கிளையிலிருந்தும் நீர் சீறியடிக்கின்றது.

மேலும், இதனை வயல் வெளிக்கு சென்ற மக்கள் அவதானித்தனை அடுத்து ஊர் மக்கள் பலரும் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply