நீண்டகாலமாக கொள்ளையில் ஈடுபட்ட கும்பலொன்று சிக்கியது!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

யாழ். வடமராட்சிப் பகுதியில் நீண்டகாலமாக மணற் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கும்பலொன்று இன்று விசேட அதிரடிப்படையினரிடம் வசமாகச் சிக்கிக் கொண்டுள்ளது.

மணற் கடத்தல் தொடர்பில் விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து, குறித்த பகுதிக்குச் சென்ற நெல்லியடி காவல்துறையினர் மணற்கொள்ளையில் ஈடுபட்ட கன்ரர் ரக வாகனத்தைக் கலைத்துச் சென்றுள்ளனர்.

சுமார் ஜந்து கிலோ மீற்றருக்கும் மேற்பட்ட தூரத்துக்கு கலைத்துச் சென்ற போது, கொள்ளையர்கள் வாகனத்தைக் கைவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

வாகனமும், கடத்தப்பட்ட மணலும் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டு, பருத்தித்துறை காவல்துறையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.பருத்தித்துறை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply