காசு கொடுக்க மறுத்த வைத்தியரை குத்தி கொன்ற பிச்சைக்காரன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

தலங்கம, பத்தரமுல்ல பிரதேசத்தில் உள்ள முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அருகில் ஆயுர்வேத வைத்தியர் ஒருவர் நேற்றிரவு பிச்சைக்காரனால் கூரிய ஆயுதத்தினால் குத்தி கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொல்லப்பட்ட வைத்தியர் மாலபே, பொத்துவார வீதியில் வசிக்கும் 57 வயதுடைய நபர் என இனங்காணப்பட்டுள்ளார்.

பல்பொருள் அங்காடியில் இருந்து வெளியேறும் போது அங்கு இருந்த பிச்சைக்காரனுக்கு பணம் கொடுக்க மறுத்ததால் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் அடுத்து பிச்சைக்காரன் வைத்தியரை கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்துள்ளதாக விசாரணைகளில்
தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் பல்பொருள் அங்காடியில் உள்ள சி.சி. டிவியில் பதிவாகியுள்ளது. தப்பி ஓடிய பிச்சைக்காரனை கைது செய்வதற்கான தேடுதல் வேட்டையில் தலங்கம பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply