கமல்ஹாசன் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற விக்ரம் படத்தின் சூட்டிங் காரணமல்ல என்று அந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த வனிதா தற்போது தெரிவித்துள்ளார்.
கமல் விலகிய உடன் அவரும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.
இதையடுத்து சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
விக்ரம் படத்தின் தயாரிப்பாளரே கமல்தான் என்று கூறியுள்ள வனிதா, அவர் நினைத்திருந்தால் சூட்டிங்கிற்கு நேரம் ஒதுக்கியிருக்க முடியும் என்றும் அதிகபட்சமாக அந்த படத்தின் எஞ்சிய சூட்டிங் 4 நாட்களே இருந்த நிலையில் பிக் பாஸ் அல்டிமேட்டிலிருந்து கமல் விலகியுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தவறாக செல்கிறது என்று அறிந்ததாலேயே அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி, பிக் பாஸ் சீசன் 6ல் வருகிறேன் என்று கூறிவிட்டு அவர் கிளம்பியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன் போட்டியாளர்களாக இருந்த தாங்களும் இந்த நிகழ்ச்சியை தவறாக கொண்டு செல்கிறார்கள் என்பது குறித்து முன்னதாக பேசியதாகவும் வனிதா கூறினார்.
தனக்கு இந்த நிகழ்ச்சி மன அழுத்தத்தை கொடுத்ததால் தான் நிகழ்ச்சியில் இருந்து விலகியதாகவும் நிகழ்ச்சியை கொண்டு செல்லும் விதம் சரியில்லை என்றும் அவர் தடாலடியாக குற்றம் சாட்டியுள்ளார்.
ஏற்கனவே கமல், வனிதா வெளியேற்றம் குறித்து ரசிகர்கள் காரணம் தெரியாமல் இருந்த நிலையில் தற்போது வனிதாவின் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow on social media