எந்த நேரத்திலும் பதவி விலகுவதற்கு தயார் – மஹிந்த ராஜபக்ஷ

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

எந்த நேரத்திலும் தான் பதவி விலகுவதற்கு தயாராகவே இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரசியல் தகவல்களை மேற்கொள்காட்டி இன்றைய பிரதான பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு மத்தியில் முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என பல தரப்பினர் குறிப்பிட்டுள்ளதாக மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, பல்வேறு தரப்பினரும் முன்வைக்கும் கோரிக்கைகள் தொடர்பில் பிரதமர் அவதானம் செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி பதவி விலகுவதற்கு அவர் இணக்கம் தெரிவித்துள்ள போதும், ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அவரை இந்த நேரத்தில் பதவி விலக வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow on social media
CALL NOW

Leave a Reply