உடல் எடையை அதிகரிக்கும்போது செய்யும் தவறுகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை பின்பற்றியும் கூட உடல் எடை அதிகரிக்கவில்லை என்றால் நீங்கள் தவறான வழிமுறைகளை பின்பற்றுவதாக அர்த்தம்.


உடல் எடையை குறைப்பதற்கு நிறைய பேர் கவனம் செலுத்துகிறார்கள். அதற்கு நேர் மாறாக உடல் எடையை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபடும் நபர்களும் இருக்கிறார்கள். ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை பின்பற்றியும் கூட உடல் எடை அதிகரிக்கவில்லை என்றால் நீங்கள் தவறான வழிமுறைகளை பின்பற்றுவதாக அர்த்தம்.

அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்க உதவும் என்று நிறைய பேர் கருதுகிறார்கள். அது தவறானது. உடல் எடையை அதிகரிக்கும் விஷயத்தில் செய்யும் தவறுகள் பற்றி மும்பையை சேர்ந்த மருத்துவர் ஜினல் படேல் கீழ்க்கண்டவற்றை சுட்டிக்காட்டுக்கிறார்.

தொழில்முறை பாடிபில்டர்கள் கட்டுடல் அழகை பராமரிப்பார்கள். கட்டுமஸ்தான உடல்வாகுடன் கம்பீரமாக காட்சியளிப்பார்கள். உடல் எடையை அதிகரிக்க விரும்பு பவர்கள் பாடிபில்டர்களை போல் நாமும் ஆக வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அவர்களுடைய பயிற்சி முறைகளை தாமும் முயற்சித்து பார்க்க திட்டமிடுவார்கள். பாடிபில்டர்கள் எத்தகைய உணவு பழக்கத்தை கடைப்பிடிக்கிறார்கள் என்பது வெளிப்படையாக தெரியாது. ஆதலால் உடல் எடையை அதிகரிக்கும் விஷயத்தில் யாருடைய வழிமுறைகளையும் கண்மூடித்தனமாக பின்பற்ற வேண்டாம்.

எடை அதிகரிப்பு ஒரே இரவில் நடந்து விடும் விஷயமல்ல. உடல் எடையை அதி கரிக்க நிறைய முயற்சி செய்ய வேண்டியிருக்கும். உடனடி முடிவுகளை எதிர்பார்ப்பதை தவிர்க்க வேண்டும். உடற்பயிற்சி மற்றும் உணவு முறைகளை சீராக பின்பற்ற வேண்டும். அதன் பிறகு மாற்றம் படிப்படியாகவே நடக்கும். அதுவரை பொறுமையாக இருக்க வேண்டும். அப்போதுதான் எடையை அதிகரிக்கும் இலக்கை அடைய முடியும்.

நிறைய பேர் சாப்பிடும் அளவை குறைத்துவிடுவார்கள். எடை அதிகரிக்கும் விஷயத்தில் செய்யும் பொதுவான தவறு இது. அப்படி உணவு கட்டுப்பாட்டை கடைப் பிடிப்பது வளர்சிதை மாற்றத்தை பாதிக்கலாம். சட்டென்று, விரும்பியபடி உடல் எடையை அதிகரிக்க முடியாது. ஒரு வேளை மட்டும் அதிகமாக உட்கொண்டு விட்டு மற்ற வேளைகளில் உணவை தவிர்ப்பது நல்லதல்ல. உணவியல் நிபுணரிடம் ஆலோசனை கேட்டு அதற்கேற்ப உணவு பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

‘பிட்னஸ்’ பிரியர்கள் கொடுக்கும் அறிவுரைகளை பலர் கண்மூடித்தனமாக பின்பற்றுகிறார்கள். அவர்கள் விரைவான எடை அதிகரிப்பு தொடர்பான ஆன்லைன் வீடியோக்களை நம்பியிருப்பார்கள். அவர்கள் பின்பற்றும் உணவு பழக்கங்களும் சிறந்ததாக இருக்காது. அதனை தவிர்த்து இயற்கை விளை பொருட்களில் இருந்து கிடைக்கும் புரதம் மற்றும் கலோரிகளை உட்கொள்ள முயற்சிக்க வேண்டும்.

உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக உடற்பயிற்சியை கைவிடக்கூடாது. ஒரே இடத்தில் அதிக நேரம் உட்காருவதையும் தவிர்க்க வேண்டும். அத்தகைய வாழ்க்கை முறை உடல் பருமனை அதிகரிக்க செய்யலாம். ஆனால் உயர் ரத்த அழுத்தம், சுவாச பிரச்சினை, இதய பிரச்சினை போன்ற பல்வேறு பாதிப்பு களை ஏற்படுத்திவிடும். உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்கள் “ஸ்கிப்பிங்” பயிற்சியை தவிர்க்க வேண்டும்.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply